செய்திகள்

மதுரை பள்ளிகளில் ஹேப்பி ஸ்கூலிங் திட்டம்

மதுரை, ஜூலை.21–
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மனநல பயிற்சி அளிக்கும் வகையில் மதுரை மாநகராட்சி மற்றும் ஹெச்.சி.எல் நிறுவன பங்களிப்புடன் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து ஹேப்பி ஸ்கூலிங் என்ற திட்டம் மதுரை மடீட்சியா அரங்கில் கமிஷனர் அனீஷ்சேகர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி நிஷாபானு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கமிஷனர் அனீஷ்சேகர் பேசும் போது, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஹேப்பி ஸ்கூலிங் திட்டத்தினால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர் களுக்கும் சமூகத்திற்கும் எந்த அளவிற்கு பயனை வழங்க முடியும் என்பதை அளவீடு செய்து கடமைக்காக அல்லாமல் உண்மையான ரிசல்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஹெச்.சி.எல். நிறுவன இயக்குநர் நிதிபுந்தீர், ஹெச்.சி.எல். நிறுவன துணை தலைவர் வி.சுப்பராமன், எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை தலைவர் மரு.சி.ராமசுப்பிரமணியன், பதிவாளர் மருத்துவர்.கே.சேகர், அபராஜிதா நிறுவன தலைவர் பாரத் கிருஷ்ண சங்கர், எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை செயல் இயக்குநர் ஆர்.ராஜகுமாரி, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்வ மணி, கல்வி அலுவலர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *